அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளனர்- நீதி அமைச்சர்...
அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள் என்பதை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள ஏற்றுக் கொண்டார். இருப்பினும் 17 பேரே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று அரச தரப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த நிலையில், நீதி அமைச்சர் நாடாளுமன்றில் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.
நீதித்துறை, குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும்
பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகிய திருத்தச் சட்டவரைவு மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டவரைவு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-வவுனியா நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு அநுராதபுரம் நீதிமன்றுக்கு வழக்கின் சாட்சியாளர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரே சாட்சியாளராகவுள்ளனர்.</p>அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றே வழக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்தால் வழக்கை இடமாற்ற முடியும்.
நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் 17 அரசியல் கைதிகளே இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் தமிழர்களாகவும் 7 பேர் சிங்களவர்களாகவும் உள்ளனர். இவர்களில் 12பேர் புதிய மகசின் சிறைச்சாலையிலும், 3பேர் திருகோணமலை சிறைச்சாலையிலும், ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலும், ஒருவர் மொனராகலை சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளனர்- நீதி அமைச்சர்...
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment