வவுனியாவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது......சிறுமி தற்கொலைக்கு முயற்சி....
வவுனியாவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது......சிறுமி தற்கொலைக்கு முயற்சி
வவுனியாவில் நேற்று முன்தினம் 14.11-2017கணேசபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிசார் இன்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு கணேசபுரம் மரக்காரம்பளையிலுள்ள தனது வீட்டிற்கு தனிமையில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் அச்சிறுமியை முச்சக்கரவண்டியினுள் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்று பாலியல் வல்றுவிற்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்கள் இது தொடர்பான முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
இதையடுத்து நேற்று குறித்த சிறுமி அலரி விதையை அரைத்து உண்டு தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 19, 20வயதுடைய இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
-சசி வவுனியா-
வவுனியாவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது......சிறுமி தற்கொலைக்கு முயற்சி....
Reviewed by Author
on
November 17, 2017
Rating:
Reviewed by Author
on
November 17, 2017
Rating:


No comments:
Post a Comment