முல்லைத்தீவு இ.போ .ச பேருந்துவிபத்து நேரடிக் காட்சி- 12 பேர் படுகாயம் - தனியார் பேரூந்து சாரதியின் அநாகரிய செயல்


------------------------------------
முல்லைத்தீவு இ.போ .ச பேருந்துவிபத்து நேரடிக் காட்சி - - காணொளியை இறுதிவரை பாருங்கள் .... தனியார் பேரூந்து சாரதியின் அநாகரிய செயல்


===============
முல்லைத்தீவில் தனியார் பேருந்தை இ.போ ச பேருந்து முந்த முற்பட்ட போது அந்த தனியார் பேருந்து முந்தவிடாமல் வீதிக்கு குறுக்கே வந்ததனால் இ.போ ச பேருந்து குடைசாய்த்து விபத்துக்கு உள்ளானது ,,
இவ் சம்பவத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் ..
விபத்தை ஏற்படுத்திய அந்த தனியார் பேருந்து நிறுத்தாமலே செல்வதை காணொளி ஊடக தெளிவாக தெரிகின்றது ,,, பொது மக்களின் உயிரை விட அந்த சாரதிக்கு பணமே முக்கியமாக தெரிகின்றது . இவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பறித்து கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும் அப்படி செய்வதன் மூலமாவது எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்க முடியும்


முல்லைதீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் 12 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைதீவு - பரந்தன் பிரதான வீதியில் இரட்டைவாய்க்கால் திருப்புமுனை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றை அரச பேருந்து முந்திச் செல்ல முற்பட்ட வேளை தனியார் பேருந்து இடம் கொடுக்காமல் வீதிக்கு குறுக்கே வந்ததால்
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு இ.போ .ச பேருந்துவிபத்து நேரடிக் காட்சி- 12 பேர் படுகாயம் - தனியார் பேரூந்து சாரதியின் அநாகரிய செயல்
Reviewed by NEWMANNAR
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment