சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கும்: கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் பகீர் -
சென்னையில் 9-ம் திகதி முதல் 12-ம் திகதி வரை பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்படும் என கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் ஆற்காடிலிருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார்.
பஞ்சாங்கத்தில் இந்தாண்டு அதிகமான மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.
அதே போல தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து பல ஏரிகள் நிரம்பின.
கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்த நிலையில், புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு பஞ்சாங்கத்தில் இந்தாண்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், விமான விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஜோதிடர் நாராயணமூர்த்தி கூறுகையில், 9-ம் திகதி முதல் 12-ம் திகதி வரை 4 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து சென்னை நகரம் வெள்ளத்தில் மிதப்பதோடு மின்சாரமும் இருக்காது என கூறியுள்ளார்.
சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கும்: கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் பகீர் -
Reviewed by Author
on
December 02, 2017
Rating:
Reviewed by Author
on
December 02, 2017
Rating:


No comments:
Post a Comment