வைத்தியத்துறையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இப்படியொரு சாதனை -
யாழ். போதனா வைத்தியசாலையில் இருவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது சாதனையாக கருதப்படுகிறது.
இதன்போது, வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞரொருவருக்கும், விசுவமடுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவ்வாறு திறந்த இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 20ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த இளைஞருக்கு முதலாவது திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கடந்த 21ஆம் திகதி விசுவமடுவைச் சேர்ந்த பெண்ணுக்கும் வெற்றிகரமாக திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆறு மணிநேரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்கள் குணமடைந்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான வளங்கள் நிறைவு செய்யப்படுமாக இருந்தால் இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைகளை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியத்துறையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இப்படியொரு சாதனை -
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment