அடிக்கடி வரும் குமட்டல்: மாரடைப்பிற்கான அறிகுறியா? -
ஆனால் இது சில குறிப்பிட்ட நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
குமட்டல் மரடைப்பின் அறிகுறியா?
குமட்டல் உண்டானால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த அறிகுறி ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக தோன்றும்.சில நேரங்களில் மாரடைப்பிற்கான வலி என்பது நெஞ்செரிச்சல் அல்லது மேல் வயிற்றில் வலி உண்டாவது போன்று தோன்றும்.
இந்த வலியுடன் சேர்த்து குமட்டல் உணர்வும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.
குமட்டல் வருவதற்கான காரணங்கள்?
- ரத்தத்தில் அட்ரனலின் அளவு அதிகரித்து, செரிமானத்தில் தடை ஏற்படும் போது அது மூளைக்கு எட்டி குமட்டல் உணர்வு உண்டாகும்.
- வயிற்று வலி, குமட்டல், வாந்தி ஆகிய அறிகுறி வயிற்றுப் பிரச்சனைக்கு மட்டுமில்லாமல், டைப் 1 நீரிழிவு நோயின் ஆரம்ப கால அறிகுறியாகவும் இருக்கும்.
- நம் உடலில் உள்ள கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பியின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் அல்லது அதன் சுரப்பு குறைந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.
- நம் உடலில் அமிலம் அதிகரித்தால் அது நெஞ்செரிச்சல், முதுகு வலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறியை உண்டாக்கும்.
- நாம் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல், வயிற்றில் கேஸ் சேர்ந்தால், அது குமட்டல் உணர்வை ஏற்படுத்தும்.
- பித்தப்பையில் கற்கள் உருவானால் அல்லது பித்தப்பையில் ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் குமட்டல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
- அதிகப்படியான வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வது, அலர்ஜி அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் கூட குமட்டல் உண்டாகும்.
அடிக்கடி வரும் குமட்டல்: மாரடைப்பிற்கான அறிகுறியா? -
Reviewed by Author
on
December 10, 2017
Rating:

No comments:
Post a Comment