பூமியின் அடுக்குகளை சேதம் செய்த வடகொரிய அணு குண்டு சோதனை: நிபுணர்கள் அதிர்ச்சி -
வடகொரியா கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்ட சக்திவாய்ந்த அணு குண்டு சோதனையால் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வடகொரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் இந்த கூற்றை உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே கருத்தை வியன்னா பகுதியை சேர்ந்த நிபுணர் ஒருவரும் தெரிவித்துள்ளார். வடகொரியா பொதுவாக அணு குண்டு சோதனை மேற்கொள்ளும் பகுதியின் அருகாமையில் இருந்தே நில அதிர்வு உருவானதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறாவது முறையாக வடகொரியா மேற்கொண்ட அணு குண்டு சோதனையானது பூமியின் அடுக்கை அசைத்துள்ளதாகவும், இத்னால் இனி இதுபோன்ற நில அதிர்வுகள் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் வடகொரியாவால் சோதனை மேற்கொள்ளப்பட்டது ஹைட்ரஜன் அணு குண்டு என அந்த நாடு தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசிய அணு குண்டை விடவும் 10 மடங்கு சக்தி வாய்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து உருவாகும் நில அதிர்வுகளுக்கு முக்கிய காரணமாக நிபுணர்களால் கூறப்படுவது வடகொரியாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதே.
கடந்த மாதம் அணு குண்டு சோதனை வளாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 100-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமானதாக தகவல் வெளியானது.
ஆனால் அதை வடகொரியா மறுத்துள்ளது. இதனிடையே தென் கொரியாவின் உளவு அமைப்புகள் வெளியிட்ட தகவலில், மேலும் இரு சுரங்கம் கட்டுமான பணியில் உள்ளதாகவும், இதுவும் அணு குண்டு சோதனை வளாகத்தின் அருகாமையிலே எனவும் தெரிவித்துள்ளது.
பூமியின் அடுக்குகளை சேதம் செய்த வடகொரிய அணு குண்டு சோதனை: நிபுணர்கள் அதிர்ச்சி -
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment