பருவத்தீ சுப்பரமணியபாரதி....மகாகவி
பாட்டுக்குள்ளே
வையகத்தை போட்டு வைத்தான்
பாமரர்க்கும் பரமனுக்கும் சேர்த்து-கவி
பாடிவைத்தான்
பல மொழிகள் கற்றுத்தேர்ந்து
பைந்தமிழே சிறந்ததென்றான்
பாரினிலே பல பச்சோந்திகளை-பற்றி
பறையறைந்தே பறந்து சென்றான்
உலகமக்களின் உயர்வுக்கு
உழைத்த பெரும் சிந்தனையாளனே
உணர்வுகளின் உச்சத்தினை அச்சமின்றி
உரிமையை உள்ளத்திலே எரியவைத்த தீயே நீ
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதான மொழியை காணோம் என்றாய்
செம்மொழியான தமிழை கவிதையிலும் -உன்
கலைப்படைப்பிலும் காணவைத்த கதிரவனே.....
பாட்டுத்திறத்தாலே இந்த வையகத்தை
பாலித்திட வேண்டுமென்று-நன்று
நீடு துயில் நீக்கி பாடிவந்த நிலா- தமிழ்
பாரெங்கும் உனக்கெடுப்பார் தமிழர் விழா....
எட்டயபுரம் தந்த முண்டாசுக்கவிஞனே
எட்டுத்திசையும் எதிரொலிக்கும் -உம்புகழ்
எங்கள் முப்பாட்டனில் ஒருவனே
ஏற்றி போற்றுகின்றோம் பாரதிபாவலனே.....
செந்தமிழை தன்கவியில் கோர்த்துவைத்தான்
எந்தன் தமிழில் தன்கவியை பாடவைத்தான்
இளங்கவிஞர்-வை-கஜேந்திரன்

பிறப்பு | சுப்பையா சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு |
---|---|
இறப்பு | செப்டம்பர் 11, 1921(அகவை 38) சென்னை, தமிழ் நாடு |
இருப்பிடம் | திருவல்லிக்கேணி |
தேசியம் | தழிழன் |
மற்ற பெயர்கள் | பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன் |
பணி | செய்தியாளர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல. |
பின்பற்றுவோர் | பாரதிதாசன் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
பிள்ளைகள் | தங்கம்மாள் (பி: 1904) சகுந்தலா (பி: 1908) |
கையொப்பம் | ![]() |
பருவத்தீ சுப்பரமணியபாரதி....மகாகவி
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment