அவுஸ்திரேலிய வீரரின் சாதனையை தகர்த்த விராட் கோஹ்லி -
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை அணிக்கு பெற்று தந்த அணித்தலைவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். இதன்மூலம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில், ரிக்கி பாண்டிங் தலைமையில் 30 வெற்றிகளை பெற்றது. இதன் மூலம், ஒர் ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர் என்ற பெருமையை பாண்டிங் பெற்றிருந்தார்.
ஆனால் இந்த ஆண்டில், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி 31 வெற்றிகளை பெற்றதால், ரிக்கி பாண்டிங்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அடுத்த இடங்களில், 2001ஆம் ஆண்டில் 29 வெற்றிகளை இலங்கைக்கு பெற்று தந்த ஜெயசூர்யாவும்,
2007ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவிற்காக 29 வெற்றிகளை பெற்று தந்த கிரேம் சுமித்தும் உள்ளனர்.
அவுஸ்திரேலிய வீரரின் சாதனையை தகர்த்த விராட் கோஹ்லி -
Reviewed by Author
on
December 07, 2017
Rating:
Reviewed by Author
on
December 07, 2017
Rating:


No comments:
Post a Comment