முதல் நாள் வேலைக்காரன் தமிழக வசூல்- இதோ முழு விவரம்....
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் வேலைக்காரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் தான் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே பெரிய ஓப்பனிங் கிடைத்த படம் என்று கூறப்பட்டது.
தற்போது இப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது, இப்படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதில் சென்னையில் ரூ 89 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ 1.69 கோடி, கோயமுத்தூரில் ரூ 1.47 கோடி முறையே வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன் வந்த ரெமோ படத்தின் முதல் நாள் வசூலை வேலைக்காரன் முறியடித்துள்ளது, ரெமோ ரூ 6.5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் வேலைக்காரன் தமிழக வசூல்- இதோ முழு விவரம்....
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment