கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் கத்தியால் குத்தி கொலை -
ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள ஓஸ்வா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
கத்தி குத்து பட்ட நிவேதன் பாஸ்கரன் (17) உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அறிந்தவர்கள், இரண்டு சிறுவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையிலேயே இந்த கொலை நடந்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் விபரங்கள் இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நிவேதனும், அவனை கொன்ற சிறுவனும் மேக்ஸ்வெல் ஹைட்ஸ் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் எனவும் பள்ளிக்கூடம் பாதுகாப்பான கற்றல் சூழலில் தான் உள்ளது எனவும் பள்ளி நிர்வாகம் விளக்களித்துள்ளது.
கொலை குறித்த ஆதாரங்களை பொலிசார் தேடி வரும் நிலையில், சம்பவத்தை பார்த்த சாட்சிகள் தங்களிடம் வந்து அது குறித்து பேச வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் கத்தியால் குத்தி கொலை -
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment