இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த...
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன் கையில் பையொன்றினை வைத்துக் கொண்டு, அந்த பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளார்.
சிறுவனின் இந்த நடவடிக்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்த சிறுவனிடம் பிரதேச மக்கள் “ஏன் இவ்வாறு குப்பைகளை அகற்றுகின்றீர்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அந்த சிறுவன், “இலங்கை ஒரு அழகான நாடு, அதை அழகாக வைத்திருப்பது எனது கடமை” எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த...
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment