லொறி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ரயில்: நான்கு பேர் பலி.. 200 பேர் காயம் -
நாட்டின் போர்ட் எலிசபெத் நகரிலிருந்து ஜோனஸ்பெர்க் நகரை நோக்கி இன்று காலை அந்நாட்டு நேரப்படி 9.15 மணிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது குறுக்கே வந்த லொறி மீது ரயில் மோதியதில் ரயிலானது தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஜன்னல் மற்றும் கதவு வழியாக வெளியில் குதித்தார்கள்.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், நூறுலிருந்து இருநூறு பேர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த மருத்துவ குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
மீட்டு குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிர் தப்பிய பயணி தியான் எஸ்தர்ய்சன் கூறுகையில், விபத்து நடப்பதற்கு முன்னால் ரயில் ஹாரன் தொடர்ந்து அடிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து திடீரென விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
லொறி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ரயில்: நான்கு பேர் பலி.. 200 பேர் காயம் -
Reviewed by Author
on
January 04, 2018
Rating:

No comments:
Post a Comment