உலகின் மிகவும் அழகான நடிகர் ஹிரித்திக் ரோஷன்
உலகளாவிய அளவில் பல கவர்ச்சிகரமான நடிகர்களை பின்னுக்குத்தள்ளி இந்த ஆண்டில் உலகின் மிகவும் அழகான நடிகராக (ஹேன்ட்ஸம்) பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.
பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.
அவருக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல பெண்களை கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்துக்கு பன்மடங்கு மெருகேற்றுகிறது.
முன்னதாக, ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்மகன் உள்ளிட்ட பல சிறப்பு பட்டங்களை ஹிரித்திக் ரோஷன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் அழகான நடிகர் ஹிரித்திக் ரோஷன்
Reviewed by Author
on
January 16, 2018
Rating:

No comments:
Post a Comment