எழுத்தாளர் ஞாநி மறைவு: கமல் இரங்கல்
சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த எழுத்தாளர் ஞாநியின் மறைவுக்கு நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் (63) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவரது இயற்பெயர் வே.சங்கரன். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஞாநியின் மறைவை அறிந்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் கமல், ஞாநியின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில், ‘திரு. ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எழுத்தாளர் ஞாநி மறைவு: கமல் இரங்கல்
Reviewed by Author
on
January 16, 2018
Rating:

No comments:
Post a Comment