இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இலங்கையர் -
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 18 வயதாகும் சவீன் பெரேரா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
கொழும்புவில் பிறந்த சவீன் பெரேரா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினார்.
தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் Middlesex அணிக்காக ஐந்து ஆண்டுகளாக விளையாடிய சவீன் பெரேரா, சமீபத்தில் Namibia-வுக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதுகுறித்து சவீன் பெரேரா கூறுகையில், அணியில் இடம்பிடித்தது பெருமையாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக கடுமையான முயற்சியின் பலனே இதுவாகும்.
முன்னாள் நட்சத்திர வீரரான Jonathan Trott-ன் ஆலோசனைகளை கேட்டுப்பெறுகிறேன், எங்கள் அணியில் James Taylor-ன் பங்களிப்பு அதிகம், அவரிடமிருந்து கற்றுக்கொள்வது சிறப்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் விளையாடி அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இலங்கையர் -
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment