அண்மைய செய்திகள்

recent
-

செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி


சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :


  • பாசுமதி அரிசி - 2 கப்
  • இறால் - அரை கிலோ
  • வெங்காயம் - 2
  • தக்காளி - ஒன்று
  • பிரியாணி இலை - ஒன்று
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மராத்தி மொக்கு - ஒன்று
  • லவங்கம் - 3
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
  • [பாட்டி மசாலா] கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • தயிர் - ஒரு மேசைக்கரண்டி
  • பட்டை - சிறு துண்டு
  • [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 3
  • [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிது
  • பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
  • அன்னாசிப்பூ - பாதி
  • ஏலக்காய் - 3

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பிரியாணி மசாலா, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.

அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.

சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.

செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி Reviewed by Author on January 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.