சிறுநீரகக் கல்லை கரைக்க ஈஸியான வழி: வீட்டில் இருந்தபடியே குணமாக்கலாம்
சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் கல் அங்கேயே தங்கி, பெரிதாக வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தி, முதுகு மற்றும் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.
சிறுநீரகக் கல்லை குணமாக்க பின்பற்ற வேண்டியவை?
- தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், கோடைக்காலமாக இருந்தால் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரம் 2 முறை இளநீர் குடிக்க வேண்டும்.
- வாரம் ஒருமுறை பார்லியை நன்கு வேகவைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வர வேண்டும். அதனால் சிறுநீர் அதிகமாக வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வதை தடுக்கும்.
- அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
- வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கி சாற்றை அடிக்கடி குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு விரைவில் நீங்கும்.
- பரங்கிக்காய், வெள்ளரிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
- புதினா கீரையை தொடர்ச்சியாக உணவில் அல்லது தனியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பு
சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கொள்ளு, காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகக் கல்லை கரைக்க ஈஸியான வழி: வீட்டில் இருந்தபடியே குணமாக்கலாம்
Reviewed by Author
on
January 05, 2018
Rating:

No comments:
Post a Comment