நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்: மிகுந்த சோகத்துடன் 35 வருடங்களாக ஓட்டை சைக்கிளில்..!
தூறல் நின்னு போச்சு படத்தில் மாமா என்று செந்தாமரையை கொஞ்சியபடி நடித்து இருப்பவர் நடிகர் சூரியகாந்த். இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்.
சினிமா ஆசையில் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு சென்னை வந்தார். ஆரம்பத்தில் பல போலி தயாரிப்பாளர்களிடம் சினிமா வாய்ப்புக்காக பணத்தை கொடுத்து ஏமாந்தார். எப்படியோ வசந்தகாலம் என்ற படத்தில் முதல் வாய்ப்பு பெற்றார். அதன்பிறகு அடிச்சுவடுகள் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. அதன்பிறகுதான் துறல் நின்னு போச்சு படத்தில் நடித்தார். இதில் பெயர் சொல்லும்படியான வேடம் கிடைத்தது.
அப்போது, அவரிடம் நடிகர் பாக்கியராஜ் கூறுயதாவது, வில்லன் வேடங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அறிவுரை கூறினார். அதன்படி கிடைத்த வேடத்தில் எல்லாம் நடித்தார். கிழக்கு சீமையிலே போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
ஆனாலும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை, வருமானம் இல்லை. இன்று வரை மாற்றம் இல்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் சென்று கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டு வருகிறார்.
இதுதான் இவரது சினிமா வாழ்க்கை. நினைத்தால் ஒருவரை புகழின் உச்சிக்கே கொண்டுசென்று விடும் சினிமா உலகம், ஆனால் தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று தினமும் மனம் வருந்தியபடியே வாய்ப்புகள் கேட்டு அலைகிறார் சூரியகாந்த்.
நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்: மிகுந்த சோகத்துடன் 35 வருடங்களாக ஓட்டை சைக்கிளில்..!
Reviewed by Author
on
January 05, 2018
Rating:

No comments:
Post a Comment