முல்லைத்தீவில் வீடுகளை சுற்றி இராணுவத்தினர்: அச்சத்தில் பொதுமக்கள் -
கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள் குடியேறிய பொதுமக்கள் தமது வாழ்விடத்தை சுற்றி இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதனால் தாம் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமது குடியிருப்புக்களைச் சுற்றி இராணுவத்தினர் இருப்பதால் எந்த நேரமும் எதுவும் நடந்துவிடக்கூடும் என அச்சமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபரும் கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே தமது இந்த இக்கட்டான நிலையை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபரும், உரிய அதிகாரிகளும் தீர்வினைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் வீடுகளை சுற்றி இராணுவத்தினர்: அச்சத்தில் பொதுமக்கள் -
Reviewed by Author
on
January 25, 2018
Rating:

No comments:
Post a Comment