மன்னார் மாவட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக விசனம்-(PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
விவசாய செய்கையின் போது 'கலை நாசினி' பயன்படுத்தப்படுகின்ற போதும் அதிக விலைக்கு தரமற்ற கலை நாசினி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
-குறிப்பாக புல் மற்றும் ஏனைய கலைகள் வளர்வதை கட்டுப்படுத்த குறித்த கலை நாசினி பயன்படுத்தப்படுகின்ற போதும் நெற்பயிரை விட புல் மற்றும் ஏனைய கலைகள் வளர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-விற்பனை செய்யப்படுகின்ற கலை நாசினிகள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும்,தரமற்றதாக காணப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறித்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே நிர்னயிக்கப்பட்ட விலையில் தரமான மருந்து வகைகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அமுல் படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விவசாயிகள் நீர் பிரச்சினை மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் கடனைப் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் விவசாயிகள் இறுதியில் ஏமாற்றத்தை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-மேலும் மருந்து தெழித்து சில தினங்களில் உரம் போட வேண்டிய நிலை உள்ளது.
எனினும் உரத்தை உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
-குறிப்பாக இப்பிரதேசத்தில் உரத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-உரத்தை வர்த்தகர்கள் இறக்குமதி செய்தவுடன் முடிவடைந்து விடுகின்றது.இதனால் அவசர தேவைகளுக்கு உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-ஒரு மூடை உரம் நிர்னயிக்கப்பட்ட விலையாக 2500 ரூபாவாக காணப்படுகின்றது.ஆனால் இப்பிரதேசத்தில் மூவாயிரம்(3000-00) ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் 2500 ரூபாவிற்கு உரம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மூவாயிரம் ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது.
எனவே உர மானியம் வழங்கப்பட்டுள்ள போதும் உரம் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
-எனவே கலைநாசினி தொடர்பிலும்,அதி கூடிய விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதீக்கப்பட்ட விவசாயிகள் தமது விவசாய செய்கையினை உரிய முறையில் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துளள்னர்.
மன்னார் மாவட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக விசனம்-(PHOTOS)
Reviewed by Author
on
January 05, 2018
Rating:
No comments:
Post a Comment