மன்னார் கட்டைக்காடு பங்கு தூய செபஸ்தியாரின் ஆலய திருவிழா...
மன்னார் கட்டைக்காடு பங்கு மக்கள் 20.01.2018 சனிக்கிழமை தங்கள் பாதுகாவலராம் தூய செபஸ்தியாரின் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காலை 7.15 மணிக்குத் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத் தந்தை அருட்பணி. ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகளாரின் வழிகாட்டுதலோடு, ஆலய அருட்பணிப் பேரவை, வழிபாட்டுக்குழு, பாடகர் குழாம், பீடப்பணியாளர், பங்கு மக்கள் இணைந்து இத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
பல அருட்சகோதரிகளும், வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ திரு.குணசீலன் அவர்களும், மற்றும் அரச, அரச சாற்பற்ற பணியகப் பணியாளர்களும், பல இறைமக்களும் கலந்து கொண்டனர்.திருப்பலி முடிவில் தூய செபஸ்தியாரின் திருவுருப் பவனியும் இடம் பெற்றது.

மன்னார் கட்டைக்காடு பங்கு தூய செபஸ்தியாரின் ஆலய திருவிழா...
Reviewed by Author
on
January 22, 2018
Rating:

No comments:
Post a Comment