அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு சிங்கள இளைஞர்களின் உயிரைக் காக்க உதவிய தமிழ் இளைஞன் -


இரண்டு சிங்கள இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தமிழ் இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களை தானமாக வழங்கியுள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் நேற்று இந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கண்டி மெனிக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ராமசாமி ரவிசந்திரன் என்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

ரவிசந்திரனுக்கு மூளைச் சாவு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்ததனைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அவரது பெற்றோர் தீர்மானித்தனர்.
இதன்படி, ரவிசந்திரனின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு கண்டி வைத்தியசாலை உடல் உறுப்பு மாற்றுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரவிச் சந்திரனின் இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மூளைச் சாவடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வது தற்போது அதிகரித்து வருவதாக கண்டி வைத்தியசாலையின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் டொக்டர் அருண அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளையின் உயிரை காப்பாற்ற முடியாது எனப் புரிந்து கொண்டு வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடி வரும் இரண்டு இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவிய ரவிச்சந்திரனின் பெற்றோருக்கு நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு சிங்கள இளைஞர்களின் உயிரைக் காக்க உதவிய தமிழ் இளைஞன் - Reviewed by Author on January 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.