மன்னார் பாடல்பெற்ற திருத்தல திருக்கேதீச்சரம் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா.13-02-2018
மன்னார் பாடல்பெற்ற திருத்தல திருக்கேதீச்சரம் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா.
வருடா வருடம் நடைபெறும் மஹா சிவராத்திரி பெருவிழாவானது 2018 இம்முறையும்
- ஏவிளம்பி ஆண்டு மாசித்திங்கள் முதலாம் நாள் செவ்வாய்க்கிழமை (13- 02- 2018) நாளை திருக்குடத்திருமுழுக்கு அபிஷேகம் பூசை அர்ச்ச்ணை நிகழ்வுகளும் சிறப்பு நிகழ்வுகளும் அழங்கார மண்டபத்தில் நடைபெறும்.
- மகாலிங்கப்பெருமானுக்கு வழமைபோல் பாலாவித்தீர்த்த திருமுழுக்கு அபிஷேகம் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
- அத்துடன் 04 யாமங்களிலும் திருமுழுக்கு பூசைகள் இடம்பெறும்
நல்லிரவு 12.15 மணிக்கு இலிங்கேற்சவ பூசையும் இடம்பெறும்.
மன்னாரின் 400 வருட பழமையானதும் அடையாளமானதுமான திருக்கேதீச்சரம் ஆலயத்தில் தற்போது முழுமையான கருங்கல்லினால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற வேளையில் மகாசிவராத்திக்காக ஆலய வளாகம் மற்றும் பாலாவித்தீர்த்தக்கரை அனைத்து பகுதிகளும் தூய்மையாகவுள்ளது.
நாளை சிவராத்திரிக்கு இலங்கையின் அனைத்துப்பாகத்தில் இருந்தும் சிவனடியார்கள் வருகை தரவுள்ளனர் அதே வேளை ஏனைய வெளிநாட்டில் இருந்தும் பக்தடியார்கள் வருகை தந்து தமது விரதங்கள் நேர்த்திக்கடன்கள் அர்ச்சனை களிலும் பூசையிலும் கலந்துசிறப்பிப்பர்.
ஆலயத்தின் புனிதமாக பக்தியுணர்வோடு கலந்துகொள்வதோடு களியாட்ட செயட்பாடுகளை தவிர்ப்போம் .
ஆலய சிறப்பு சுருக்கமாக
திருக்கேதீஸ்வரம் திருத்தலமானது இலங்கை இரத்னதீபம் நாட்டில் வடக்குமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் மாதோட்ட என்னும் இடத்தில் சூழமைவினைக் கொண்டு காணப்படுகின்றது.
இத்தலமானது பாடல்பெற்ற திருத்தலமாகும். நயன்மார்களின் வாழ்வியல் நுட்பங்கள் அனுகுமுறையினையே பின்பற்றுகின்றனர் இந்துக்கள்.
காரணம் அவர்கள் பாடிய பாடல்களின் அடிப்படையில் இந்துக்கள் தமது வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். இங்குள்ள சிவபெருமானை துதித்து சம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார்கள் தங்கள் பதிகங்களில் கூறப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
சம்பந்தர் பாடிய "விருது குன்றமா மேருவில் நாணற" என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் கடற்கரை அமைவிடச் சிறப்புப் பற்றியும்.
கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டங்........இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்........இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்.... ....வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
....வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்....
...வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்....
....வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டந்.... ....கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்....
....மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்.....
....மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்....
....முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்ட..
சுந்தரமூர்த்தி நாயனாருடைய "நத்தார்படை ஞானன்" என்று தொடங்கும் பதிகத்திலும்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்....
....வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்........வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்....
....மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்....
....கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்....
....வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்..
இதில் மாதோட்டத்தின் சூழமைவினை விளக்குகின்றது.
தற்பொழுது காணப்படும் வாய்க்கால்கள் குறிப்பாக கடற்கரையினை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் நீர்வடிகாலானது புராதன வியாபாரம் நடைபெற்ற காலத்தினை குறிப்பிடுவதாகவும் காணப்படுகின்றது. (முழுமையான ஆய்வுகள் நடந்தவண்னமுள்ளது.)
ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன்னே 400மீற்றர் தொலைவில் காணப்படும் நீர்தடாகம் இது அமைக்கப்பட்டது 2009இன் பின்னர்
பாவம் வினையறுப்பான் பயில் பாலாவியின் கரைமேல்... இக் குளமானது பாலாவிதீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. நாம் பாவங்களை செய்து தீர்த்தோம் இறைவா இனியும் செய்யாதிருக்கவும் செய்தவையினை முடிவுறுத்துவதற்குமாக தீர்த்ததை இந்துக்கள் ஏற்கின்றனர்.
-வை.கஜேந்திரன்-
மன்னார் பாடல்பெற்ற திருத்தல திருக்கேதீச்சரம் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா.13-02-2018
Reviewed by Author
on
February 12, 2018
Rating:

No comments:
Post a Comment