அண்மைய செய்திகள்

recent
-

24 வருடங்களாக படுக்கையில்.. கை, கால்களை அசைக்க முடியாமல் அவதி -


4 பிள்ளைகளின் தந்தையான 55 வயது Tazul Munir மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானதால், 24 வருடங்களாக கொஞ்சம் கூட அசைய முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
இதற்கிடையில் Rheumatism என்னும் நோய் வேறு தாக்கியதால் அவரது கால்கள் ‘o’ வடிவத்தில் ஆகிவிட்டன. அவரால் கைகளையோ கால்களையோ அசைக்க முடியாது.

அவரது நான்கு பையன்களும்தான் அவரைக் கவனித்துக் கொள்கிறார்கள். குளிக்க வைப்பதிலிருந்து உணவு ஊட்டுவது வரை அவர்கள்தான் கவனித்துக் கொள்கிறார்கள்.
1994 ஆம் ஆண்டு பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த பேருந்து ஓட்டுனரான Tazul Munir மதுபானம் தீர்ந்துபோனதால், இன்னும் அதிக மதுபானம் வாங்குவதற்காக தனது பேருந்தை எடுத்துக் கொண்டு மதுபானக் கடைக்கு சென்றிருக்கிறார்.
பேருந்து வேகமாக செல்லும்போது நாய் ஒன்று குறுக்கே பாய, நாய் மீது ஏற்றாமல் தவிர்ப்பதற்காக Munir பேருந்தை வேகமாக வளைக்க, பேருந்து நிலை தடுமாறி இரண்டு குட்டிக்கரணம் அடித்து நின்றது. பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட Munir மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
24 வருடங்களாகிறது இன்னும் அவர் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார்.
சிறிது காலம் மருத்துவ சிகிச்சைகளைத் தவிர்த்து alternative medicineஐயும் முயற்சி செய்திருக்கிறார், இருந்தும் பலன் ஒன்றும் இல்லை.
என்றாவது ஒரு நாள் தனக்கு ஏதாவது ஒரு அற்புதம் நடக்கும், தான் குணமாகி மீண்டும் நடமாடுவேன் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறார் Munir.


24 வருடங்களாக படுக்கையில்.. கை, கால்களை அசைக்க முடியாமல் அவதி - Reviewed by Author on February 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.