600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ள சீனா -இலங்கைக்கு
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிக்காக சீனா 600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக எதிர்வரும் 2வருடங்களில் சீனா 600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.
அத்துடன், 2 வருடங்கள் துறைமுகத்திற்கு கப்பல் எதுவும் வராமல் இயங்கி வருகின்றது.
குறித்த துறைமுகத்திற்கு ஆரம்ப வரிசை செலுத்துவதற்கு, கொழும்பு துறைமுகத்தின் இலாபத்தை பெற்று கொள்ளப்பட்டது.
இவ்வாறான நிலை 5 வருடங்களுக்கு முன்னெடுத்திருந்தால் கொழும்பு துறைமுகத்தை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ள சீனா -இலங்கைக்கு
Reviewed by Author
on
February 04, 2018
Rating:

No comments:
Post a Comment