ஆதி மனிதன் எப்போது இந்தியாவை வந்தடைந்தான்? -
அத்திரம்பாக்கம் கொற்றலை ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லாலான ஆயுதங்களை ஆய்வு செய்ததில் அவை 3,85,000 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் 3,85,000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த நவயுக மனிதர்கள் பயன்படுத்திய அதே வகை ஆயுதங்கள் ஆகும்.
இதுவரை ஹோமோ சேப்பியன்கள் என்று அழைக்கப்படும் மனிதர்கள் 1,25,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்கு வந்ததாகக் கருதப்பட்டு வந்தது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கல்லாயுதங்களின் கண்டுபிடிப்பு அந்தக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
நவயுக மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றிய அதே காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களாக இவை இருப்பதால் ஒன்றில் இந்தியாவிலிருந்த மனிதனும் அதே வகை ஆயுதங்களைத் தானாகவே உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது தோன்றிய சில காலங்களுக்குள்ளாகவே அவன் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே ஆதிமனிதன் 3,85,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்திருப்பான் என்பது அத்திரம்பாக்கம் தொல்பொருள் ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
ஆதி மனிதன் எப்போது இந்தியாவை வந்தடைந்தான்? -
Reviewed by Author
on
February 04, 2018
Rating:
Reviewed by Author
on
February 04, 2018
Rating:


No comments:
Post a Comment