உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்!
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த மூன்று பேரின் வழக்குகளும் சாட்சியங்களின் பாதுகாப்பின் நிமித்தம் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இதற்கு எதிர்புத் தெரிவித்து குறித்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரகாரம் குறித்த மூன்று பேரின் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்!
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment