கோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர்: நம்ப முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள் -
இந்தோனேஷியாவின் Gowa பகுதியைச் சேர்ந்தவர் Akmal, 14 வயதுடைய இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து Akmal-ன் தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம்.
தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார், மாணவன் தொடர்பான x-ray புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதாக கூறுகின்றனர். நாங்கள் அதை நேரடியாக பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர்.
மேலும் மருத்துவர்கள் மாணவனை முழுமையாக பரிசோதித்து வருவதாக அங்கிருக்கும் Syekh Yusuf மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர்: நம்ப முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள் -
Reviewed by Author
on
February 22, 2018
Rating:

No comments:
Post a Comment