இந்த உணவுகளை சமைக்காமல் சாப்பிடாதீர்கள் -
ஆதிமனிதன் காலத்திலிருந்து, சில உணவுகளை பச்சையாக வேகவைக்காமல், சமைக்காமல், பொறிக்காமல், பேக் செய்யாமல் சாப்பிட்டு வருகிறோம்.
உதாரணத்திற்கு, பழங்கள், சில வகை காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள், பால் போன்றவையாகும்.
இப்படி சமைக்காமல் பச்சையாக சில உணவுகளை உட்கொள்வதால், எந்த ஒரு பாதிப்பும் உடலுக்கு ஏற்படுவதில்லை.
மாறாக, சில உணவுகளை பச்சையாக உண்ணும் போது உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் தோன்றுகின்றன.
மனித உடல் ஆரோக்கியம் என்பது விலைமதிப்பற்றது. சீரான உடல் ஆரோக்கியம் பெற பச்சையாக உட்கொள்ளகூடாத சில உணவு பட்டியலை இப்பதிவில் காண்போம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணுவதால் வாய்வு பிரச்சனை உண்டாகிறது. செரிமான கோளாறு, தலைவலி, குமட்டல், போன்றவை உண்டாகின்றன.வேக வைக்கும்போதும், சமைக்கும்போது நச்சு பொருள் வெளியேறிவிடுவதால் இப்படி எடுத்து கொள்வது நலம்.
ராஜ்மா
ஆரோக்கியமான பருப்பு வகையாகும். இதை வேகவைக்காமல் உண்ணும்போது, குமட்டல், வாந்தி, செரிமான பிரச்சனைகள், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படுகிறது.இதற்கு காரணம் ராஜ்மாவில் இவற்றை உண்டாக்கும் என்சைம்கள் உள்ளது தான். ஆகவே ராஜ்மாவை உட்கொள்வதற்கு முன், நன்றாக ஊற வைத்து சமைத்து உன்ன வேண்டும்.
தேன்
கடைகளில் வாங்கும் தேன் பதப்படுத்தப்பட்டது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம். மாறாக ஆர்கானிக் தேன் பதப்படுத்தாமல் உபயோகிக்கபடுகிறது. ஆகையால் இதை பச்சையாக எடுத்துக்கொள்ள கூடாது.இதில் க்ராய்நோடோக்ஸின் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம், உணவு ஒவ்வாமை, தலை சுற்றல் போன்றவற்றை உண்டாக்குகிறது.
பால்
காய்ச்சாத பசும்பாலில், நுண் கிருமிகள், ஈ கோலி , சல்மோனெல்லா போன்றவை இருக்கும். அதனால் பசும்பாலை வாங்கி பயன்படுத்துகிறவர்கள் கட்டாயம் காய்ச்சி பருகுவது அவசியம்.ப்ராக்கோலி
ப்ரோக்கோலி என்பது நிச்சயமாக ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு. டயட்டில் இருப்பவர்கள் இதை பச்சையாக சாலடில் அல்லது உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.இதில் இருக்கும் அதிகமான சர்க்கரைச் சத்து , செரிமான பிரச்னையை உண்டாக்குகிறது. ஆகவே இதனை வேக வைத்து சாப்பிட வேண்டும்.
இதேபோல் ஆலிவ் எண்ணெய், காளான், முட்டை போன்ற பொருட்களை பச்சையாக எடுத்துக்கொல்லாமல், சரியான முறையில் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது.
இந்த உணவுகளை சமைக்காமல் சாப்பிடாதீர்கள் -
Reviewed by Author
on
February 01, 2018
Rating:

No comments:
Post a Comment