இலங்கையின் அரைவாசிக்கும் அதிகமான தேவையை நிறைவு செய்த வடக்கிற்கு ஏற்பட்டுள்ள நிலை -
சின்ன வெங்காயச் செய்கையில் கிட்டத்தட்ட இலங்கையின் தேவையில் அரைவாசிக்கும் கூடுதலான தேவையை நிறைவு செய்த வடக்கில் இன்று இங்குள்ள மக்களுக்கே சின்ன வெங்காயம் முழுமையாகக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
வடக்கினைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை நஞ்சாக்கி விட்டது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக விவசாய முயற்சிகளில் எமது விவசாயிகள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் விவசாய நிலங்கள் அண்மைக் காலங்களில் மட்டும் இவ்வாறு நஞ்சடைந்தமைக்கும் மழை காலத்திற்கு வராமைக்கும், நீர்பற்றாக்குறைக்கும் காரணங்கள் கண்டறிதல் அவசியமாகும்.
சின்ன வெங்காயச் செய்கையில் கிட்டத்தட்ட இலங்கையின் தேவையில் அரைப்பங்கிற்கு கூடுதலான தேவைகளை நிறைவு செய்த வட மாகாணம் இன்று வட மாகாணத்திலுள்ள மக்களுக்கே சின்ன வெங்காயம் முழுமையாகக் கிடைக்காத நிலைக்கு வந்துள்ளது.
வாழைப்பழ உற்பத்தியில் நாம் முன்னணி வகிக்கின்ற போதும் உற்பத்தியாளர்களின் அவசரங்களும் பண ஆசைகளும் மற்றும் அலட்சியத் தன்மையும், வாழைப்பழத்தின் தரத்தினை வெகுவாகக் குறைத்து விட்டது.
மிளகாய் பயிர்ச்செய்கை கூட தற்போது மிகவும் குறைவடைந்து விட்டது.
இலங்கையின் அரைவாசிக்கும் அதிகமான தேவையை நிறைவு செய்த வடக்கிற்கு ஏற்பட்டுள்ள நிலை -
Reviewed by Author
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment