முல்லைத்தீவில் 173 மில்லியன் ரூபா செலவில் விவசாய அபிவிருத்தி வேலைகள் -
விவசாய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டில் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 67 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 31.29 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
இதேபோல மாகாணசபை உறுப்பினர்களுடைய பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளின் கீழ் ஐந்து இலட்சம் ரூபாவும், பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் அலுவலகத் தேவைக்காக 0.65 மில்லியன் ரூபாவும்,
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக 3.937 மில்லியன் ரூபாவும், விவசாயத்தை நவீன மயப்படுத்துகின்ற செயற்திட்டத்தின் கீழ் 123.107 மில்லியன் ரூபாவும்,
வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு உணவு விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 13.4575 மில்லியன் ரூபாவும் என 173 மில்லியன் ரூபா செலவில் இவ்வாண்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் 173 மில்லியன் ரூபா செலவில் விவசாய அபிவிருத்தி வேலைகள் -
Reviewed by Author
on
March 05, 2018
Rating:

No comments:
Post a Comment