எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி சபைகள் இயங்கும் -
எதிர்வரும் 22 ஆம் திகதி 326 உள்ளூராட்சி சபைகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு ஆட்சியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் 15 உள்ளூராட்சி சபைகளை தவிர ஏனையவற்றின் பிரதிநிதிகள் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் 24 மாநகர சபைளும் 41 நகர சபைகளும் அடங்கும்.
முழு உள்ளூராட்சி சபைகளுக்கும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 5 ஆயிரத்து 61 உறுப்பினர்கள் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 264 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
60 வீதமான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 40 வீதமான உறுப்பினர்கள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி சபைகள் இயங்கும் -
Reviewed by Author
on
March 14, 2018
Rating:

No comments:
Post a Comment