தவறான கடவுச்சொல்: 47 ஆண்டுகள் லோக் ஆன ஐபோன் -
ஷாங்காய் நகரின் லூ என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பெண்மணி தமது 2 வயது மகனை குடியிருப்பில் விட்டு விட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் தாயாரின் மொபைல் போனை எடுத்து விளையாடிய குறித்த சிறுவன், அதன் உள் நுழைவதற்காக முயற்சித்துள்ளான்.
ஆனால் கடவுச்சொல் தெரியாமல், தவறான கடவுச்சொல்லை மீண்டும் மீண்டும் அதில் பதிவு செய்துள்ளான்.
ஐபோனை பொறுத்தமட்டில் ஒவ்வொருமுறையும் தவறான கடவுச்சொல்லை பதிவு செய்தால் குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த மொபைல் லோக் ஆகும் என கூறப்படுகிறது. மொபைலை விளையாடிய குறித்த சிறுவன் பல முறை தவறான கடவுச்சொல்லை பதிவு செய்துள்ளதால் அந்த மொபைல் தற்போது 25 மில்லியன் நிமிடங்கள் வரை லோக்காக இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதாவது சுமார் 47 ஆண்டுகள் அந்த ஐபோன் லோக்கில் இருக்கும். இதனிடையே வெளியே சென்று வீடு திரும்பிய சிறுவனின் தாயார் நடந்தவற்றை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தொடர்ந்து 2 மாதம் அவர் பொறுமையாக இருந்துள்ளார்.
தம்மால் 47 ஆண்டுகள் பொறுமையாக காத்திருக்க முடியாது என கூறும் அவர், தமது பேரப் பிள்ளைகளிடம் சொல்ல தமக்கு ஒரு கதை கிடைத்துள்ளது எனவும் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மொபைல் போன் தொழில்நுட்பவியலாளர் ஒருவர், குறித்த பெண்மணி பொறுமையாக 47 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு, அந்த மொபைலை மீண்டும் அனைத்து செயலிகளையும் நிறுவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐபோனை பொறுத்தமட்டில் பாதுகாப்பு கருதி 10 முறைக்கு மேல் தவறான கடவுச்சொல்லை பதிவு செய்தால் தானாகவே லோக் ஆகும் வசதியை உருவாக்கியுள்ளது.
ஆனால் பயனாளர்கள் தங்கள் தரவுகள் அனைத்தையும் அழித்துக் கொண்டு மீண்டும் ஐபோனை புதிதாக பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் அதில் உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறான கடவுச்சொல்: 47 ஆண்டுகள் லோக் ஆன ஐபோன் -
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment