50 முறை ஹாட்ரிக் கோல்: ரொனால்டோவின் புதிய சாதனை -
லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ரியல் மாட்ரிட் மற்றும் கிரோனா அணிகள் மோதின. இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-3 என்ற கோல் கணக்கில் கிரோனா அணியை வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம், போர்த்துகல் மற்றும் கிளப் அணிகளுக்காக 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ லா லிகாவில் 34 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 7 முறையும், போர்த்துகல் அணிக்காக நான்கு முறையும், கேபா டெல் ரே-யில் இரண்டு முறையும் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
அத்துடன் பிரீமியர் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் குவாலிபையர், பிபா கிளப் உலகக் கிண்ணத் தொடரில் தலா ஒருமுறையும் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
லா லிகா தொடரின் தொடக்கத்தில் மோசமாக விளையாடிய ரொனால்டோ, அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 22 கோல்கள் அடித்துள்ளார்.
50 முறை ஹாட்ரிக் கோல்: ரொனால்டோவின் புதிய சாதனை -
Reviewed by Author
on
March 20, 2018
Rating:
No comments:
Post a Comment