அதிமுக கட்சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா! -
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில் அ.தி.மு.க, திமுக, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, அ.தி.மு.க, திமுக, சமாஜ்வாதி கட்சி, அனைத்திந்திய பார்வேர்ட் பிளாக், சிவசேனா ஆகிய மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு, தொடர்ந்து வளர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அந்த பட்டியலின் முதல் இடத்தை சமாஜ்வாதி கட்சி பிடித்துள்ளது. அந்த கட்சியின் சொத்து மதிப்பு 2011-12யில் 212.86 கோடியாக இருந்தது. ஆனால், 2015-16யில் 634.96 கோடியாக உயர்ந்துள்ளது.
அடுத்த இடத்தில் ரூ. 257.18 கோடிகளுடன் திமுக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ள அ.தி.மு.க-வின் சொத்து மதிப்பு 224 கோடியாகும், கடந்த 2011ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 88.21 கோடியில் இருந்து, 224 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் சராசரி சொத்து மதிப்பு 2015 மற்றும் 2016யில் 3.76 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல, மாநில கட்சிகள் கடன் வாங்கியுள்ள தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2011-12யில் சிவசேனா கட்சி, தங்களுக்கு 16.59 கோடி கடன் இருந்ததாக குறிப்பிட்டது.
தி.மு.க கட்சிக்கு 9.21 கோடியும், தெலுங்கானா ராஷ்டிர சமித்தி கட்சிக்கு 15.97 கோடியும் கடன் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிவசேனா கட்சியின் கடன் 99.78 சதவிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா! -
Reviewed by Author
on
March 10, 2018
Rating:

No comments:
Post a Comment