மன்னாரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பில்-(VIDEO)
-மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம்களின் வணக்கஸ்தலங்களான பள்ளி வாசல்களுக்கு முன் இன்று வெள்ளிக்கிழமை(9) காலை முதல் ஆயுதம் ஏந்திய நிலையில் இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமைகளில் ஈடு பட்டுள்ளனர்.
-நாட்டின் சில பாங்களில் முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதல் சம்பவம் மற்றும் மக்களின் உடமைகள்,வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டு வரும் சம்பவங்களை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (9) முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
-அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக நிலையங்கள் பல இன்று முழுமையாக மூடப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள தமிழ் வர்த்தகர்களும் முஸ்ஸீம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து தமது வர்த்தக நிலையங்களை மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
-இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் ஜீம்மாத்தொழுகையின் பின் எதிர்ப்பு நவடிக்கைகள் இடம் பெறலாம் என்ற அச்சத்தில் ஆயுதம் ஏந்திய நிலையில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
எனினும் ஜீம்மாத்தொழுகையின் பின்னார் வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்க வேண்டாம் என பள்ளி நிர்வாகத்தினால் விசேட அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் ஜீம்மாத்தொழுகைக்குச் சென்றவர்கள் தமது வீடு நோக்கி சென்றனர்.
இதனால் மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
மன்னார் நிருபர்-

Reviewed by Author
on
March 09, 2018
Rating:

No comments:
Post a Comment