கிரிக்கெட்டில் சிறப்பினை பெற்ற நேபாளம் -
உலகக் கிண்ணப் போட்டி தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் நேபாள அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதின. முதலில் ஆடிய கினியா அணி 27.2 ஓவரில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதன்பின்னர், தனது ஆட்டத்தினை துவங்கிய நேபாளம் 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்தது. இந்த தோல்வியின் காரணமாக பப்புவா நியூ கினியா அணி, ஒருநாள் அந்தஸ்தை இழந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு அரசின் தலையீடு உள்ளிட்ட பல பிரச்சனைகளால், நேபாள கிரிக்கெட் சங்கத்தை ஐ.சி.சி தடை செய்தது. இந்த தடையினால் நேபாள கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி.யிடமிருந்து வளர்ச்சிக்கான நிதி எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், 2022ஆம் ஆண்டு வரை நேபாளத்துக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த நாட்டுக்கு இனி ஐசிசி-யின் நிதியுதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட்டில் சிறப்பினை பெற்ற நேபாளம் -
Reviewed by Author
on
March 17, 2018
Rating:
No comments:
Post a Comment