இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? என்ன நோய் தெரியுமா? -
அவை எந்த நோயின் பாதிப்பாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதனால் அந்த நோயின் தீவிரத்தை எளிதில் குறைக்க முடியும்.
அந்த வகையில் சிறுநீரக நோயின் அறிகுறிகள் எப்படி தோன்றும் என்பதை பார்க்கலாம்.
சிறுநீரக நோயின் அறிகுறிகள்?
- சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, எரித்ரோஃபோய்டின் எனும் ஹார்மோன் குறைவாக சுரக்கும். அதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வு நிலை உண்டாகும்.
- சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்.
- சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம்.
- கை அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரக செயலிழப்பிற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
- சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால், ரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் சில நாட்கள் தொடர்ந்து உடலில் ஒருவித அரிப்பு உண்டாகலாம்.
- நம் உடலில் கழிவுகள் அதிகம் சேர்ந்தால், அது முகத்தில் வீக்கத்தை உண்டாக்கும். இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது கூட சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
- சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். அதனால் சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.
- குமட்டல் பிரச்சனை ஏற்படுவது கூட சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும். நச்சுக்கள் உடலில் தங்கி சிறுநீரக பாதிப்பை உண்டாக்கி, செயலிழப்பை அதிகப்படுத்தும்.
- வலிப்பு நோயுடன், உடல் மற்றும் தலையில் கட்டுப்படுத்த முடியாத வகையில் வலிகள் இருந்தால் அதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? என்ன நோய் தெரியுமா? -
Reviewed by Author
on
March 13, 2018
Rating:

No comments:
Post a Comment