ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் யார்? -
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோஹ்லி இரண்டாமிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணித் தலைவர் தினேஷ் சண்டிமால் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபடா இரண்டாமிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணியின் ரங்கனா ஹெரத் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஜடேஜா இரண்டாமிடத்திலும், அஸ்வின் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கையின் ரங்கனா ஹெரத் பத்தாவது இடத்தையும், தில்ருவன் பெரேரா 11-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் யார்? -
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment