மன்னாரில் நேற்று மாலை பெய்த மழையினால் பல கிராமங்களில் வெள்ளம்-(படம்)
மன்னாரில் நேற்று புதன் கிழமை(14) மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படும் என தெரிய வருகின்றது.
மன்னாரில் நேற்று மாலை பெய்த மழையினால் பல கிராமங்களில் வெள்ளம்-(படம்)
Reviewed by Author
on
March 15, 2018
Rating:

No comments:
Post a Comment