வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கை கள் அனைத்து இடைநிருத்தம்
வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
28.02.2018 இல் இருந்து இலங்கையில் உள்ள கல்வி சார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் எமது வளாகத்தின் கல்வி சார், கல்வி சார செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 13.03.2018 அன்று வளாக முதல்வர் தலைமையில் பீடாதிபதிகள், துறை தலைவர்கள் கூடி கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் முடிவடைந்த பின்னர் எங்களது கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளோம்.
பரீட்சைகள் அனைத்தும் முன்பே முடிவடைந்தள்ளது. 12.02.2018 அன்று வியாபார கற்கைகள் பீடத்தின் புதிய ஆண்டிற்கான கற்கை நெறிகள் மட்டுமே ஆரம்பமாகியிருந்தன. அப்போது கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக கல்விக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் வழங்க முடியாத காரணத்தினால் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தியிருந்தோம். மேலும் 03.03.208 அன்று நடைபெறவிருந்த பிரயோக விஞ்ஞான பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கு அனுமதிப்பதற்கான விவேக நுண்ணறிவு பரீட்சையானது தற்போது பிற்போடப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பரீட்சைகளிற்கான திகதியும் 19.03.2018 தொடங்க இருந்த பிரயோக விஞ்ஞான கற்கை நெறிகள் கற்கைநெறிக்கான திகதியும் இப்போராட்டம் முடிவடைந்த பின்னர் பத்திரிகை வாயிலாக அறிவிக்கப்படும்.
வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கை கள் அனைத்து இடைநிருத்தம்
Reviewed by Author
on
March 15, 2018
Rating:

No comments:
Post a Comment