சுவிஸ் வருகை தந்துள்ள தமிழக தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்!
அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மூன்று மணி முதல் ஆறு மணி முதல், Varasithy Mahall, Hüttenwiesenstrasse 6, 8108 Dällikon எனுமிடத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் வந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் பங்கெடுத்து தாயக விடுதலையை வென்றெடுப்பதில் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்த கருத்தியல் தளத்தை பலப்படுத்தி விடுதலையை வென்றெடுப்பதில் பங்காளிகளாக இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வருகை தந்துள்ள தமிழக தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்!
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment