மன்னார் 02 பிரதேச சபைகளை இழந்தமை தொடர்பாக ஊடக சந்திப்பின்போது...இ.சாள்ஸ் நிர்மலநாதன் mp
மன்னார் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2017 உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மன்னார்மாவட்டத்தில் உள்ள 05பிரதேசசபைகளினதும் 01நகரசபையினதும் 03 பிரதேச சபைகளை அதாவத முசலி பிரதேச சபை- மாந்தைமேற்கு பிரதேசசபை -மன்னார் பிரதேசசபை இழந்தமை தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது கொளரவ பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வழங்கிய கருத்து…
இம்முறை நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது அதுவும் மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டடில் 03 சபைகளை இழந்தமை கவலைக்குரிய விடையமே அதிலும் முசலிப்பிரதேசசபையானது முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் அது எமக்கு இழப்பல்ல மிகுதியாகவுள்ள இரண்டு சபைகளின் இழப்புக்கு காரணம் என்றால்........
மக்கள் குழம்பிப்போயுள்ளனர் அதனடிப்படையில் எமது கட்சிக்குள் முரண்பாடுகளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே உள்ள வேற்றுமையுணர்வும் வட்டார முறைத்தேர்தலாலும் எமது கட்சியில்இருந்து பிரிந்து புதிய கட்சிகளை தொடங்கியமையாலும் மாற்றுக்கட்ச்சியிலே வேட்பாளர்களாக போட்டியிட்டமையும் எமக்குள்ளே நாம் பிளவுபட்டதால் எமக்கான வாக்குகள் உடைக்கப்பட்டு உறுப்பினர்கள் சிதறடிக்கப்பட்டு அது ஒரு வலுவான ஆட்சியமைக்க முடியாமல் போனதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
ஐக்கியதேசிய கட்சியும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இணைந்து 03 சபைகளையும் கைப்பற்றியது.
11 ஆசனம் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி விகிதாசாரத்தில் 07ஆசனமே கிடைக்கும் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 1635
பிரிந்து நின்ற கட்சிகள் மொத்தமாக 2478 பெற்றுக்கொண்டபோதும் சூரியன்சின்னத்தில் 08 உறுப்பினர்கள் விகிதாசாரத்தில் தெரிவாகியிருந்த வேளையில் 03 உறுப்பினர்கள் நடுநிலமை வகித்தபோதும் 05 உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட்பதியுதீனுக்குஆதரவாக இருந்ததால் மாந்தைமேற்கு பிரதேசசபையினை இழந்தோம்.
01 ஆசனத்தினால் தான் மன்னார் பிரதேச சபையினையும் இழந்தோம் சைக்கிள் சின்னத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர் நடுநிலமை வகித்தார் அவரை மதிக்கின்றேன்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுகின்றது என்று தேர்தல் பிரச்சாரங்களை செய்து போட்டியிட்ட விடுதலைப்புலிகள் போராளிக்கட்சிகள் என்று தங்களைஅடையாளப்படுத்திய வர்கள் கடைசிநேரத்தில் ஆளும்கட்சிப்பக்கம் தலைசாய்த்ததுதம் கவலைக்குரிய விடையமே…
முடிந்ததைகதைத்து வேலையில்லை இனியாவது தமிழ்மக்களின் பிரதி நிதிகளாக இருக்கின்ற வீடு சைக்கிள் சூரியன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயலாற்றவேண்டும் அத்தோடு அடுத்ததடவை 04சபைகளையும் மாநகர சபையினையும் கைப்பற்றவேண்டும்.
இம்முறைவெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களிடமும் மன்னார்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கேட்டுக்கொள்வது என்ன வென்றால் இனம்.மதம்.மொழி வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களினதும் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் வகையில் தங்கள் ஒவ்வொருவரினதும் சேவை அமையட்டும்.
-வை.கஜேந்திரன்-
மன்னார் 02 பிரதேச சபைகளை இழந்தமை தொடர்பாக ஊடக சந்திப்பின்போது...இ.சாள்ஸ் நிர்மலநாதன் mp
Reviewed by Author
on
April 15, 2018
Rating:

No comments:
Post a Comment