நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு -
இந்திய பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கடந்த 12-ம் திகதி அரசியல் கட்சியினர் சென்னை விமான நிலையம் அருகில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
இதில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஆதரவாக பல்லாவரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போராட்டம் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மற்றும் 18 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் தரப்பில் ஜாமீன் கேட்டு சீமானின் வழக்கறிஞர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 18 பேரும் மறு உத்தரவு வரும்வரை திருத்தணி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஜாமீன் வழங்கினார்.
மன்சூர் அலிகானின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் மட்டும் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு -
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment