மக்கள் சந்திப்பு......இது புதுப்பாடமே…
மன்னார் மாவட்டத்தில் காட்டாஸ்பத்திரிக்கிராமத்தில் திரு.மகேந்திரன் அவர்களின் தலைமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ்நிர்மலநாதன் அவர்கள் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் திரு.விஜயன் அவர்களும் சின்னக்கரிசல் பெரியகரிசல் உவரி வளநகர் ஓலைத்தொடுவாய் சிறுத்தோப்பு காட்டாஸ்பத்திரி உதயபுரம் கிராமங்களை உள்ளடக்கிய மக்களினை ஒன்றுகூட்டிய மக்கள் சந்திப்பாக இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது
- காணிப்பிரச்சினைகள்
- வீட்டுத்திட்டப்பிரச்சினை
- வீதிப்பிரச்சினைகள் இன்னும் பலவகையான பிரச்சினைகளை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் இப்பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அவற்றுக்கான இடையூறுகள் சவால்கள் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியதுடன் அதற்கான தீர்வுகளை மிகவிரைவாக பெறுவதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் அவசியம் என்றார் நாம் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோமானால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கலாம்.

மக்கள் சந்திப்பு......இது புதுப்பாடமே…
Reviewed by Author
on
April 29, 2018
Rating:

No comments:
Post a Comment