சீனா எடுத்த அதிரடி முடிவு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை -
சீனா உலக நாடுகளில் இருந்து மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொருட்களை நீண்ட காலமாக இறக்குமதி செய்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு குறித்த கழிவுப் பொருட்கள் இறக்குமதிக்கு சீனா அரசு தடை விதித்தது. அந்த தடை உத்தரவை மீண்டும் நீட்டித்து மறு உத்தரவு பிறப்பித்துள்ளது சீனா.
2017 ஆம் ஆண்டு உலக நாடுகளிடம் இருந்து 24 வகையிலான கழிவுப் பொருட்களை சீனா தொடர்ந்து இறக்குமதி செய்து வந்துள்ளது.
தற்போது சொந்த நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ள இருப்பதால், உலக நாடுகளின் கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் இருப்பதாக அறிவித்துள்ளது.
மட்டுமின்றி ஏற்கெனவே அமுலில் இருந்த 24 பொருட்களின் பட்டியலுடன் மேலும் 32 பொருட்களையும் சேர்த்துள்ளது.
கடந்த ஆண்டு சீனா மேற்கொண்ட குறித்த அதிரடி முடிவால் பல நாடுகள் கடும் சிக்கலுக்கு உள்ளாகின.
கழிவுப்பொருட்களின் மறுசுற்சிக்கு சீனாவையே நம்பியிருந்த பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டதாக கூறும் அதிகாரிகள், தற்போது வரை குறிப்பிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டு கழிவுப்பொருட்களால் தத்தளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சீனாவின் இந்த அதிரடி முடிவால் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், மலைபோல் குவியும் கழிவுகளை குழிதோண்டி புதைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கழிவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 400 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா எடுத்த அதிரடி முடிவு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை -
Reviewed by Author
on
April 22, 2018
Rating:

No comments:
Post a Comment