மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு பிற்போடல்.(படம்)
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலையின் அபிவிருத்திக்காக விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலையின் அபிவிருத்திக்காக விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு குழுக்கல் எதிர் வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(22-04-2018) மாலை இடம் பெற இருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி (12.05.2018) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட செயலத்துக்கு முன்பாக அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு இடம் பெறும் என மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு பிற்போடல்.(படம்)
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment