மன்னாரில் 21 மாணவர்களுக்கு பாராட்டு விழா----முழுமையான படங்களுடன்
கடந்த 2017 நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப்பரீட்சையில் அதி சிறப்பு சிறப்பு சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் வலையக்கல்விப்பணிப்பாளர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 28-04-2018 காலை மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் மகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சாதனை மாணவர்களான
- Mn/St.Xaviers Girls college M.Nithusha Sosai-3A-Bio Sc-1st
- Mn/Murunkan MV Sharon Alphonse -3A-BST-1st
- Mn/Erukkalampiddy Muslim MMV-M.I.Iyoobkhan-ABC-E-Tech-1st
- Mn/St.Xaviers Boys College Sesar Croos Adaikalam-3A-Com-1st
- Mn/St.Anne’s MV- D.J.Temcious Fernando 2AB-Phy.Sc-1st
- Mn/Erukkalampiddy Muslim MMV-M.I.M.Janoobu-2AB-BST-2nd
- Mn/Sithivinayagar Hindhu College S.thiruchselvam-B2C-E-Tec-2nd
- Mn/Sithivinayagar Hindhu College A.Iruthayarajan Croos-2AB-Phy-Sc-2nd
- Mn/Fatima MMV Thanusan Sivabala Suntharan -3A-Com-2nd
- Mn/Erukkalampiddy Muslim MMV-M.L.Fatima Sasla-A2B-BST-3rd
- Mn/St.Xaviers Girls college Mariyan.Maristella-3A-Com-3rd
- Mn/Al-Azhar M.V M.F.K.Mohamed-Rizan-2AC-BST-4th
- Mn/Sithivinayagar Hindhu College T.Thaksheya-3A-Com-4th
- Mn/Erukkalampiddy Muslim MMV-Lareefa Anwardeen-ABC-BST-5th
- Mn/Nanattan.MV –A.Anne Nivethana Peival-3A-Com-5th
- Mn/Murunkan MV N.Thushyanthini -ABC-BST-6th
- Mn/St.Xaviers Boys College Roxan Jesuthas-3A-Com-6th
- Mn/Adamban MMV-J.Mathumitha –Bst-7th
- Mn/Sithivinayagar Hindhu College M.F.Suhaina-2BC-BST-8th
- Mn/Erukkalampiddy Muslim MMV-J.Fathima Jasira -ABC-BST-9th
- Mn/Sithivinayagar Hindhu College -Sebamalai Coonghe.Milton-A2C-BST-10th
1
மேற்குறித்த 21 மாணவர்களை கௌரவித்து நினைவுச்சின்னமும் 10000/-ரூபா அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டதோடு இரண்டு வலையக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை மன்னார் மாவட்டத்திற்கான பிரித்தானியா நலன்புரிச்சங்கம் செயற்குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் திருமதி.ரெஜினா இராமலிங்கம் அவர்களின் தலைமையில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களுடன் இரண்டு வலையக்கல்விப்பணிப்பாளர்கள் மதத்தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக….
மன்னார் மாவட்டமானது அன்று பின்தங்கிய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டதும் தள்ளப்பட்துமான மாவட்டமாகவே இருந்து வந்துள்ளது ஆனால் இன்று கல்வியில் மற்ற மாவட்டங்களோடு போட்டி போட்டு பல சவால்களை எதிர்கொண்டு மனிதவளம் பௌதீகவளம் பொருளாதாரம் போன்றவற்றினை கடந்து இன்று கல்வியில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம்.
2017 உயர்தரப்பரீட்சையில் 704 மாணவர்கள் பங்கு பற்றி அதில் 502 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதியுடையவர்களாக உள்ளனர்.
77வீதம் சித்தி பெற்று வடமாகாணத்தில் 1ம் இடத்தினையும் தேசிய ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்றுள்ளோம் அதேபோல் இங்கு இருக்கும் 21மாணவர்கள் திறமைச்சித்தி பெற்றிருப்பதால் இன்னும் கூடுதலாக அந்தந்த துறையில் தங்களுடன் 21மாணவர்களை பல்கலைக்கழகம் அழைத்து செல்கின்றார்கள் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் அத்தோடு இங்கு பட்டம்பெற்று மீண்டும் மன்னாரிலே சிறந்த சேவையாற்ற வேண்டும். அப்போதுதான் மன்னார் மாவட்டம் தொடர்ச்சியான முறையில் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் உச்சம் பெறும் அதற்கு ஆசிரியர்கள் அதிபர்கள் அரசஅதிகாரிகள் கல்விப்பணிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளத்தினால் செயற்படவேண்டும்.
பிரித்தானியா ஐக்கியராச்சியம் மன்னார் கிளையானது 2010முதல் 2018வரை மன்னார் மாவட்டத்தின் மாணவர்களுக்காக சுமார் 70இலட்சம் ரூபா செலவில் பலவகையான கல்விச்செயற்பாடுகளை செய்துவருவதாகவும் அதில் பிரதானமாக 06மாத ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியினையும் அதேபோல் 800மாணவர்களுக்குமேல் விழிப்புணர்வு கருத்தரங்குகள் செய்துள்ளோம் அத்துடன் தற்போது 06-09 வரையுமான மாணவர்களின் ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானம் பாடங்களில் 35 குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு விசேட வகுப்புக்களையும் விடுமுறைநாட்களில் நடத்திவருவதாகவும் இன்னும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதுவாக இருப்பினும் மாணவர்களின் கல்வி நிலையில் பாரிய எழுச்சி ஏற்படுமானால் அது மன்னார் மாவட்டத்துக்கு பெருமை என்பதோடு மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எழுச்சியான விடையமே….
-வை-கஜேந்திரன்-
மன்னாரில் 21 மாணவர்களுக்கு பாராட்டு விழா----முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment