அமெரிக்கா - ரஷ்யா மோதல் உக்கிரம்! ஆபத்தான கட்டத்தில் இலங்கை -
சிரியா விவகாரம் தொடர்பில் ரஷ்யா - அமெரிக்கா நெருக்கடியில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
சிரியா நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை போர் வரை அதிகரித்தால் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகும் என அரசியல் விமர்சகருமான மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
சிரியாவை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதும் மொஹான் சமரநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்று பிரித்தானியா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது ரஷ்யா என அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் ஆயிரம் கணக்கான பாதுகாப்பற்ற ரவுட்டர்கள் ஹெக்கர்களினால் ஊடுருவப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய 400 அவுஸ்திரேலிய நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதலில் அவுஸ்திரேலிய தகவல்கள் வெளியே செல்லவில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - ரஷ்யா மோதல் உக்கிரம்! ஆபத்தான கட்டத்தில் இலங்கை -
Reviewed by Author
on
April 18, 2018
Rating:

No comments:
Post a Comment